அரசு கலை அறிவியல் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு பயிற்சி முகாம்

அரசு கலை அறிவியல் கல்லூரியில்  டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு பயிற்சி முகாம்
X

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்விற்கான இலவச பயிற்சி முகாம் நடந்தது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நடந்தது.

படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது தற்போது குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது. இதற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக அரசு சார்பில் பல்வேறு பயிற்சிகளும் தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வழிகாட்டலின் கீழ் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, குரூப் 2ஏ, தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கவிழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குனர் மணி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, இலவச வகுப்பை தொடங்கி வைத்து, போட்டித்தேர்வுகளில் பங்குபெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்து, பயிற்சி வகுப்பினை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற மாணவ, மாணவியரை வாழ்த்தினார்.

இதில் பேராசிரியர்கள் ரகுபதி, சரவணாதேவி, ஞானதீபன், ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.

Tags

Next Story