குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் மூன்றாம் நாள் முகாம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
மக்களின் பிரச்சினைகளை அவர்களது பகுதிக்கே அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று மனுக்கள் பெறும் திட்டமான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற நடந்த மூன்றாம் நாள் முகாமில், நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, முகாமினை துவக்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, எரிசக்தி துறை மற்றும் மின்சார வாரியம், வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, வீட்டுவசதி துறை, சுகாதாரத்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். தாசில்தார் சண்முகவேல், ஒ.ஏ.பி. தாசில்தார் தங்கம், ஆர்.ஐ., வி.ஏ.ஒ.க்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். டிச. 27ல் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.
குமாரபாளையம் அம்மன் நகர் சாலை அமைப்பதில் மீண்டும் இழுபறி ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
கடந்த 20 ஆண்டுகளாக நாராயண நகர், அம்மன் நகர் பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக, மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மிக மோசமான நிலையில் இருந்தது. தற்சமயம் இந்த சாலை அமைக்க நகர மன்ற தலைவரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது. இருந்தாலும், பொதுப்பணித்துறையிடம் இருந்ததால், நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் முழுமையாக சாலை அமைக்க தொடர்ந்து இடையூறாக இருந்ததாக கூறப்பட்டு, இதனால் சாலை குறுகலாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிற்சாலைகள் மிகுந்த அந்த பகுதியில், ஓர் இடத்தில் அகலமாகவும், ஒரு இடத்தில் குறுகலாகவும் போட்டால், லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர மிகவும் இடையூறாக இருக்கும். எனவே அனைத்து இடங்களிலும் ஓரே மாதிரியான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu