அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறும் பொதுமக்கள்: போலீசார், அதிகாரிகள் அதிருப்தி

அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறும் பொதுமக்கள்:  போலீசார், அதிகாரிகள் அதிருப்தி
X

அதிகாரிகள் நிபந்தனை விதித்தும், காவிரியில் குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் பொதுமக்கள்.

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிபந்தனை விதித்தும் பொதுமக்கள் அலட்சியப்படுத்துவதால் வருவாய்த்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரிகளால் சில நிபந்தனை விதித்தும், அதனை மீறும் பொதுமக்களால் போலீசார், வருவாய்த்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு கடந்த 4 நாட்களாக இரவு பகல் பாராமல் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி ஆற்றில் துணி துவைக்க கூடாது, குளிக்க கூடாது, கரையோர பகுதி வீடுகளில் வசிக்க கூடாது, அரசால் ஏற்பாடு செய்யபட்டிருக்கும் பாதுகாப்பு மையத்தில் தங்க வேண்டும் என அதிகாரிகள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனையும் மீறி, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், அலட்சியத்துடன் காவிரி ஆற்றில் துணி துவைப்பது, குளிப்பது போன்ற நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அயராது பணியாற்றி வரும் அதிகாரிகள், பணியாளர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். ஆர்.டி.ஒ. இளவரசி ஆய்வு செய்ய வந்தபோது, காவிரி கரை ஓரமாக வசிப்பவர்கள் கதவை மூடிக்கொண்டு உள்ளே இருந்தனர். கதவை தட்டி அவர்களை வெளியே வரவழைத்து, பாதுகாப்பு மையங்களில் தங்குமாறு ஆர்.டி.ஒ. கேட்டுக்கொண்டார்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், அனைவரது உழைப்பை அலட்சியம் செய்வது போல் விதி மீறும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil