குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ. சார்பில் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ. சார்பில்  போனஸ்  கேட்டு ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ. சார்பில் போனஸ் கேட்டு நடந்த ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ. சார்பில் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் போனஸ் 20 சதவீதம், கூலி உயர்வு 75 சதவீதம் கேட்டு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.

கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. சி.பி.எம். நகர செயலர் சக்திவேல் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அசோகன், நகர செயலர் பாலுசாமி, மாவட்ட தலைவர் மோகன், நகர துணை செயலர் வெங்கடேசன், நகர பொருளர் எத்திராஜ், மாவட்ட குழு நிர்வாகி சண்முகம், மேகநாதன் , சந்திரசேகரன், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story