வெப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வெப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

வெப்படை நால்ரோட்டில், சி.ஐ.டி.யு. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெப்படையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் பகுதியில் அம்மன் கோயில், ஆர்ஜி ஸ்பின்னிங் மில்லில் பீகாரைச் சேர்ந்த இளம்பெண்ணை, மூன்று நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து வெப்படை நால்ரோட்டில், சி.ஐ.டி.யு. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான உடனடியான நிவாரணத்தை வழங்கவும், ஆலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் நலம் காக்க விசாகா கமிட்டி அமைத்து விடவும், நாமக்கல் மாவட்ட பஞ்சாலைகள் இளம்பெண்கள் குழந்தை தொழிலாளர்களை, இரவு நேரத்தில் வேலை வாங்குவதை தடுத்து நிறுத்தக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. பஞ்சாலை சங்க மாவட்ட தலைவர் எம் தனபால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர்.ரெஜிஸ் குமார் பங்கெடுத்து ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா