சிஐடியு 51-வது ஆண்டு விழா- கபசுரக் குடிநீர் வழங்கி கொண்டாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்க அமைப்பாக சிஐடியு தொழிற்சங்கத்தின் 51வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்க வெகுஜன அமைப்பாக உள்ள சிஐடியு தொழிற் சங்கத்தின் 51வது ஆண்டு துவக்க விழா, இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் வ.உ.சி. நகர் ஆகிய பகுதிகளில் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில், கொரோனா தொற்றை தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

அப்பகுதி பொதுமக்களுக்கு தனிமனித இடைவெளியுடன், மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில், இலவசமாக கபசுர குடிநீர் வழங்கினர். ஏராளமான தொழிலாளர்கள், பொதுமக்கல் ஆர்வமுடன் வாங்கி பருகினர். இந்நிகழ்வில் சிஐடியு தொழிற்சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story