குமாரபாளையம் ஓவியர் சங்க விழாவில் திரைப் பிரபலங்கள் 50 மரக்கன்றுகள் நடவு

குமாரபாளையம் ஓவியர் சங்க விழாவில் திரைப் பிரபலங்கள் 50 மரக்கன்றுகள் நடவு
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஓவியர் சங்க விழாவில் 50 மரக்கன்றுகளை திரை பிரபலங்கள் சார்லி சாப்ளின், பெஞ்சமின் நட்டனர்.

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஓவியர் சங்க விழாவில் திரை பிரபலங்கள் கலந்துகொண்டு 50 மரக்கன்றுகளை நட்டனர்.

குமாரபாளையம் நகரில் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா, 50 மரக்கன்றுகள் நடும் விழா, கொடியேற்றுவிழா, பெயர்பலகை திறப்பு விழா, அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா நகர தலைவர் பொன் கதிரவன் தலைமையில் நடைபெற்றது.

ஓவியர்கள், திரைப்பட நடிகர்களான திருப்பூர் மாவட்ட கவுரவ தலைவர் சாப்ளின் பாலு, சேலம் மாவட்ட கவுரவ தலைவர் பெஞ்சமின் பங்கேற்று 50 மரக்கன்றுகளை நட்டனர். மாவட்ட செயலர் செந்தில்குமார் கொடியேற்றி வைத்தார். திருச்செங்கோடு வட்டார துணை செயலர் சலீம் பெயர் பலகையை திறந்து வைத்தார். மாநில அமைப்பு செயலர், சேலம் மண்டல தலைவர் சலீம் கல்வெட்டினை திறந்து வைத்தார். மாநில பொது செயலர் அன்பரசு, மாவட்ட தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

கொரோனா ஓவியங்கள் வரைந்த ஓவியர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. உறுப்பினர்கள் அனைவர்க்கும் அடையாள அட்டைகளை சார்லி சாப்ளின், பெஞ்சமின் வழங்கினார்கள். விழா நிகழ்சிகளை வட்டார துணை தலைவர் குணசேகரன், சீனு ஆர்ட்ஸ் சீனிவாசன் தொகுத்து வழங்கினர்.

விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் நகர செயலர் விச்சந்திரன், வட்டார செயலர் பாஸ்கரன், நகர பொருளர் சிங்காரவேல், நகர துணை தலைவர் சிவகுமார் உள்பட பலர் செய்திருந்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!