குமாரபாளையம் சிஎஸ்ஐ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா..

குமாரபாளையம் சிஎஸ்ஐ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா..
X
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியான சிஎஸ்ஐ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் பள்ளியான சிஎஸ்ஐ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மேலும், நிகழ்ச்சியின்போது, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் லெவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுகுனாராஜ், நிர்வாக பொறுப்பாளர் பிரபு, நிர்வாகிகள் பாஸ்கர்ராவ், செல்வராஜ், பவானி ஆயர் விக்டர் ராஜ், குமாரபாளையம் ஆயர் ஜேம்ஸ் சாந்தப்பன், விடியல் பிரகாஷ், இல்லம் தேடி கல்வி நிர்வாகிகள் ஜமுனா தனலட்சுமி, ஆசிரியைகள் ஜாய்ஸ் அருள்மேரி, மேர்சிபாகுளோரி, ஹெலன் பிரிதில்லா, பி.டி.ஏ. ஆசிரியைகள் சித்ரா, ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

கிறிஸ்துமஸ் விழா குறித்து பள்ளி ஆசிரியைகள் கூறியதாவது:

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, டிசம்பர் மாதத்தில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஒவ்வொரு வீடாக சென்று குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவது வழக்கம்.

அதன் பிறகு, டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில், கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு புத்தாடை அணிந்து வழிபடுவது உண்டு என ஆசிரியைகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....