அரசு உதவி பெறும் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா..!

அரசு உதவி பெறும் பள்ளியில்   கிறிஸ்துமஸ் விழா..!
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே, அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே, அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடந்தது. ஆயர்கள் பெர்னாட்ஷா, சார்லஸ் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர் கிறிஸ்துவின் புகழ் பாடும் பாடல்கள் பாடினர். இதில் கிறிஸ்து பிறப்பு முதல் அவர் வாழ்க்கையை நாடகமாக மாணவ, மாணவியர் நடித்து காட்டினர். மேலும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கினர். இதில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், நிர்வாகிகள் பிரபு, செல்வராஜ், ராஜேந்திரன், விடியல் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அரசு பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் இலவச சித்தா மற்றும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் காளியப்பன் நலம் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை டாக்டர் கீர்த்தனா பங்கேற்று, சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை குறித்து மாணவ, மாணவியரிடம் எடுத்துரைத்தார். பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தேவையானவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!