பள்ளிபாளையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சௌடேஸ்வரி பேசினார்.
பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சேர்மன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சௌடேஸ்வரி பேசுகையில், இந்த பகுதியில் குழந்தை திருமணம், இள வயது கருவுருதல், அதிகம் நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் குழந்தைகளை காத்திட மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்குகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா இறப்பால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இதுவரை 4 கோடியே 85 லட்சம் நிதி வழங்கபட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் 69 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டம் முழுதும் 713 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரதமர் பி.எம்.கேர் திட்டத்தின் மூலம் 38 லட்சம் ரூபாய் குழந்தைகளுக்கு வழங்கபட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நகராட்சி கமிஷனர் கோபிநாத் பேசுகையில், குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேனர்கள் வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை சேர்மன் பாலமுருகன், கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu