குமாரபாளையத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

குமாரபாளையத்தில் குழந்தை திருமணம்  தடுத்து நிறுத்தம்
X
குமாரபாளையத்தில், குழந்தை திருமண நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டது.

குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியில் வசிக்கும் பிளஸ் 1 படிக்கும் 18 வயது பூர்த்தியடையாத மாணவிக்கு, திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதன்படி, சைல்டு லைன் அலுவலர் அருள்ராணி, வி.ஏ.ஒ. செந்தில்குமார் இருவரும் நேரில் சென்று மாணவியின் பெற்றோரை சந்தித்தனர்.

சிறுமிக்கு வயது 18 ஆகாத நிலையில், திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். உரிய வயது வந்ததும் திருமண ஏற்பாடுகள் செய்யலாம் எனவும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு, அந்த சிறுமியை அழைத்து வரும்படியும் அறிவுறித்தியுள்ளனர். இது குறித்து சைல்டு லைன் மற்றும் குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!