குமாரபாளையத்தில் குழந்தை திருமணம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்

குமாரபாளையத்தில் குழந்தை திருமணம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குழந்தை திருமணத்தால் பெண் கர்ப்பமானதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம் அக்ரஹார வீதியில் வசிக்கும் 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கு, அவரது பெற்றோர்கள் திருப்பூரை சேர்ந்த கூலி வேலை செய்யும் 22 வயது மணமகனுக்கு 2 மாதங்கள் முன்பு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

தற்போது அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். ஜி.ஹெச்.ல் மாதம் தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது. இதற்காக பெயர், விலாசம், வயது, ஆதார் போன்ற பதிவுகள் குறிப்பிடும் போது, இந்த பெண்ணுக்கு 18 வயது முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தற்போது கர்ப்பமாகி உள்ளார் என்பது தெரியவந்தது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரில் வந்த சைல்டு லைன் நிர்வாகி அருள்ராணி, வி.ஏ.ஒ. செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்ததில், சம்பவம் உண்மை என்பது உறுதியானது.

திருமண வயது வராத தம்பதியைரை அழைத்து,ஆலோசனை கூறி, திருமண வயது வரும் வரை பிரித்து வைப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது பெண் கர்ப்பமானதால் என்ன செய்வதென்று சைல்டு லைன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!