குழந்தை திருமணம் செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது

குழந்தை திருமணம் செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது
X
குமாரபாளையத்தில் 17 வயது சிறுமியை மணந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம், காவேரி நகரை சேர்ந்தவர் மயிலரசன், 22. இவர், சில நாட்கள் முன்பு, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த குழந்தைத் திருமணம் குறித்து, நாமக்கல் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. கலெக்டரின் பரிந்துரை பேரில், குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, மயிலரசனை போக்சோ சட்டத்தின் படி கைது செய்தனர். சிறுமியை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்