/* */

நேரடி வகுப்பா? ஆன்லைன் கிளாஸா? எது பெஸ்ட்? குமாரபாளையத்தில் பட்டிமன்றம்

குமாரபாளையம் அரசு பள்ளியில், வோர்டு அமைப்பு மற்றும் சைல்டு லைன் சார்பில், சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நேரடி வகுப்பா? ஆன்லைன் கிளாஸா? எது பெஸ்ட்? குமாரபாளையத்தில் பட்டிமன்றம்
X

குமாரபாளையம் அருகே, வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் வோர்டு அமைப்பு மற்றும் சைல்டு லைன் சார்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேசிய மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

குழந்தைகள் தினவிழாவையொட்டி, நவ. 14 முதல் நவ. 19 வரை குழந்தைகள் நண்பர்கள் வாரமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதை முன்னிட்டு, குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில், வோர்டு அமைப்பு மற்றும் சைல்டு லைன் சார்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

மாணவர்களின் கற்பிக்கும் முறை இணைய வழி கற்பிக்கும் முறை சிறந்ததா? நேரடி கற்பிக்கும் முறை சிறந்ததா? எனும் தலைப்பில், தலைமை ஆசிரியை கவுரி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டதாரி ஆங்கில ஆசிரியர் அருள் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்தினார். இதில் நேரடி கற்பிக்கும் முறையே சிறந்தது என தீர்ப்பு வழங்கினார். பட்டிமன்றத்தில் பங்கேற்று பேசிய மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சைல்டு அணி உறுப்பினர்கள் சுப்பிரமணியன், அருள்ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 20 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்