குமாரபாளையம் JKKN கலை, அறிவியல் கல்லூரியில் செஸ் போட்டிகள்
குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கலை அறிவியல் கல்லூரி சார்பில் செஸ் போட்டிகள் நடைபெற்றது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி துறையின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதனை கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர். சீரங்கநாயகி தலைமை தாங்கி போட்டியினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த செஸ் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் 18 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஆடவர் பிரிவில் மூன்றாம் ஆண்டு B.Com.(CA) மாணவன் கலையரசன், முதலிடத்தையும், மூன்றாம் ஆண்டு B.Com.(A&F) மாணவன் பிரகாஷ் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
மகளிர் பிரிவில் மூன்றாம் ஆண்டு B.Com.(TFD) மாணவி விஜிதா முதலிடத்தையும், மூன்றாம் ஆண்டு B.Com.(CA) மாணவி தேவி ஸ்ரீ இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை, கல்லுரியின் தாளாளர் ஸ்ரீமதி .செந்தாமரை, நிர்வாக இயக்குநர், ஓம்சரவணா, கல்லூரி டீன் முனைவர். பரமேஸ்வரி, கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் சக மாணவ, மாணவியர்கள், பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu