குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற செஸ் போட்டி

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற செஸ் போட்டி
X

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற செஸ் போட்டிகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன.

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற செஸ் போட்டிகள் நடைபெற்றன.

சென்னையில் வரும் 28 ம்தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை சர்வதேச செஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி மாணவ, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுதும் செஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஒரு கட்டமாக குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. குமாரபாளையம் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் 160 பேர் இதில் பங்கேற்றனர். தலைமை ஆசிரியை சிவகாமி போட்டிகளை துவக்கி வைத்தார். துணை தலைமை ஆசிரியை தமிழி, சாரதா, ஆசிரியர் மாணிக்கம், விளையாட்டு ஆசிரியர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்