குமாரபாளையம் ஃபிஸ்ட் பால் வீராங்கனைக்கு, சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உதவித்தொகை வழங்கல்
1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, குமாரபாளையம் மாணவி தபஸ்வினி சென்னை 'சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்'உதயநிதி ஸ்டாலினிடம் பெற்றுக்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல்-ராதிகா தம்பதியரின் மகள் தபஸ்வினி. இவர் சிறந்த ஃபிஸ்ட் பால் பிளேயர். அடுத்த மாதம் ஜூலை 27-ஆம் தேதி ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் ஃபிஸ்ட் பால் உலக கோப்பை போட்டி நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தபஸ்வினி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாட்டிற்கு சென்று வர செலவுத் தொகையாக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் வரை ஆகும் என்பதால், இவ்வளவு பெரிய நிதியை திரட்ட முடியாமல் மாணவியின் பெற்றோர் தவித்து வந்தனர். போட்டியில் கலந்து கொள்ள முடியுமா முடியாதா என்ற கவலையில் இருந்தனர். மாணவி குறித்த செய்தி, சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் பிறகு தபஸ்வினி குடும்பத்தாரை சென்னைக்கு வரவழைத்த எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் நடைபெறும் உலக போட்டிக்கு சென்று வர ரூ.ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவி தபஸ்வினி, உதயநிதி ஸ்டாலினிடம் நிச்சயமாக போட்டியில் வென்று வருவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu