திமுக மூத்த நிர்வாகிகளின் பிறந்தநாளுக்கு இரு வேளை அன்னதானம் வழங்கிய சேர்மன்

திமுக மூத்த நிர்வாகிகளின்  பிறந்தநாளுக்கு இரு வேளை அன்னதானம் வழங்கிய சேர்மன்
X

தி.மு.க. முன்னாள் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஜே.கே.கே. சுந்தரம், அவரது துணைவியார் ராஜலட்சுமி ஆகியோரது பிறந்தநாள் விழாவில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் திமுக மூத்த நிர்வாகிகளின் பிறந்தநாளுக்கு நகராட்சி சேர்மன் இரு வேளை அன்னதானம் வழங்கினார்.

தி.மு.க. மூத்த நிர்வாகி, முன்னாள் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஜே.கே.கே. சுந்தரம், அவரது துணைவியார் ராஜலட்சுமி ஆகியோரது பிறந்தநாள் விழா, இவர்களின் புதல்வரும், நகர பொறுப்புக்குழு தலைவருமான மாணிக்கம் தலைமையில் குமாரபாளையம் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.

நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இவர்களின் பிறந்தநாளையொட்டி அம்மா உணவகத்தில் காலை மற்றும் மாலை பொதுமக்களுக்கு சேர்மன் விஜய்கண்ணன் இலவசமாக உணவு வழங்கினார். இதில் கவுன்சிலர்கள் அழகேசன், கோவிந்தராஜன், சியாமளா, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story