குப்பையில்லா நகராட்சியாக திகழ சேர்மன் விஜய்கண்ணன் நடவடிக்கை

குப்பையில்லா நகராட்சியாக திகழ சேர்மன் விஜய்கண்ணன் நடவடிக்கை
X

விஜய்கண்ணன், நகரமன்ற தலைவர், குமாரபாளையம்

குமாரபாளையம் நகரம் குப்பையில்லா நகராட்சியாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் நகரம் குப்பையில்லா நகராட்சியாக திகழ, நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் கூறியுள்ளார்.

இதுகுறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூறுகையில், அனைத்து வார்டுகளிலும் தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாத குப்பை கிடங்கு அமைக்க வேண்டும்.

நமது நகரில் ஒரு நாளைக்கு 16 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அவைகளில் 5 டன் மட்டுமே சின்னப்பநாயக்கன்பாளையம், மணிமேகலை தெருவில் உள்ள தூய்மை இந்தியா, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுரமாக்கப்படுகிறது. மீதமுள்ள குப்பைகளில் 6 டன் அனைத்து வார்டுகளில் உரங்கள் தயாரிக்க வைக்கப்பட்ட கருப்பு பேரல்களில் சேகரிக்கப்படுகிறது.

இதனால் நாளுக்கு நாள் குப்பை சேர்ந்து கொண்டே இருப்பதால், குப்பை கிடங்கு அமைக்க இடம் ஆய்வு செய்து, குப்பை கிடங்கு விரைவில் அமைக்கப்படும். பொதுமக்கள் குப்பைகளை சாலையில் கொட்டாமல், தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் ஓட்டல் கடையினரும் தூய்மை பணியாளர்களிடம் கழிவுகளை கொடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!