தினசரி மார்க்கெட், அறிவு சார் மைய கட்டுமான பணிகளைஆய்வு செய்த சேர்மன்

தினசரி மார்க்கெட், அறிவு சார் மைய கட்டுமான பணிகளைஆய்வு செய்த சேர்மன்
X

குமாரபாளையத்தில் அறிவு சார் மையம் கட்டுமான பணிகளை சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் தினசரி மார்க்கெட், அறிவு சார் மைய கட்டுமான பணிகளை சேர்மன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதே போல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1கோடியே 92 லட்சம் மதிப்பில் கணினி இணைய வசதியுடன் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இவைகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் கண்ணன், கவுன்சிலர்கள் ராஜ், கோவிந்தராஜ், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்