குமாரபாளையத்தில் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கிய சேர்மன்

குமாரபாளையத்தில் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கிய சேர்மன்
X

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 211 மாணவிகளுக்கு சேர்மன் இலவச சைக்கிள்கள் வழங்கினார்.

குமாரபாளையத்தில் 211 மாணவிகளுக்கு சேர்மன் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

தமிழக முதல்வர் ஆணைப்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தல்படி மாநிலம் முழுதும் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியை சிவகாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று 211 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார். சத்துணவு கூடத்தில் சென்று மதிய உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்ததுடன், கழிப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கேட்ட தலைமை ஆசிரியையிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக சேர்மன் உறுதியளித்தார்.

இவ்விழாவில் கவுன்சிலர்கள் ஜேம்ஸ், கனகலட்சுமி, அழகேசன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், சரவணன், விக்னேஷ், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்