குமாரபாளையம் கோவில் விழாவில் பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு

குமாரபாளையம் கோவில் விழாவில் பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு
X
குமாரபாளையத்தில், கோவில் கும்பாபிஷேக விழாவில் இரு பெண்களிடம் 10 பவுன் நகை பறித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகரில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில், ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா கும்பாபிஷகம் நேற்று நடைபெற்றது. இதில் நகரில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில், மர்ம நபர்கள், இரு பெண்களின் நகைகளை திருடி சென்றனர். இது பற்றி குமாரபாளையம் போலீசில், திருவள்ளுவர் நகரை சேர்ந்த பொன்னம்மாள், 58, வாசுகி நகரை சேர்ந்த காளியம்மாள், 61,புகார் அளித்தனர். கூலித்தொழிலாளி பொன்னம்மாளின் ஐந்தரை பவுன் தாலிக்கொடியும், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை காளியம்மாளின் ஐந்து பவுன் தங்க செயின் பறிபோனதும் தெரியவந்துள்ளது. குமாரபாளையம் போலீசார் சி.சி.டி.வி. கேமராவில் ஆய்வு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!