குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
X

குமாரபாளையம் நாராயண நகர் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பாக இல்லம் தேடி கல்வி மையத்தில் இரண்டு மாத ஆங்கில பேச்சு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி வழங்கிய சண்முகம் கவுரவிக்கப்பட்டார்.

வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் பங்கேற்று பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி மற்றும் இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

தமிழக அரசு சில வருடங்களாகவே பள்ளிக் கல்வித்துறையில் அதிரடியான மாற்றங்களை புகுந்தி வருகிறது. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண் என மதிப்பெண்ணை வைத்து தரம் பிரிப்பதை மாற்றி அமைத்தது. இந்த முறையால் மாணவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை அனைத்து தரப்பினரும் வரவேற்றனர். இதை போலவே இப்போது ஆங்கில மொழியில் சரளமாக பேச வேண்டும் என்பதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கையேட்டை தயாரித்துள்ளது.

இந்தக் கையேடுகள் ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களின் 2ஆம் பருவத்தில் 12 பாட வேளைகளிலும், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 பாடவேளைகளிலும் வழங்கப்படும். ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி சார்ந்த வகுப்புகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!