குமாரபாளையம் அரசுப்பள்ளியில் இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கும் விழா

குமாரபாளையம் அரசுப்பள்ளியில் இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கும் விழா
X

குமாரபாளையம் புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் புத்தர் தெரு அரசு தொடக்கப்பள்ளியில் இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு குமாரபாளையம் புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் நோட்டுகள், சீருடை, பேக், காலணி, வண்ண பென்சில்கள், உள்ளிட்ட பல இலவச நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது.

பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் வாசுதேவன் பங்கேற்று இலவச நலத்திட்டப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார். மேலும் முகக் கவசங்கள், கிருமி நாசினி, கொரோனா பாதிப்பு வராமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

Tags

Next Story