குமாரபாளையத்தில் மாற்றுத்திறனுடையோர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனுடையோர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாற்றித்திறனாளி செல்லமுத்து கராத்தே சாதனைகள் செய்து காட்டினார்.

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனுடையோர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனுடையோர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் நாமக்கல், சேலம் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. இசையுடன் திரைப்பட பாடல் பாடுதல், கராத்தே சாகச நிகழ்ச்சிகள் நடத்தி காட்டுதல், சிலம்பம் சுழற்றுவது, ஏணி சாகசம் உள்ளிட்ட சாகச நிகழ்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது. ஆதரவற்ற 2 பெண்களுக்கு தையல் மெசின்கள், 250 நபர்களுக்கு மளிகை பொருட்கள், ஒருவருக்கு எல்போ எனும் வாக்கிங் ஸ்டிக் ஆகியன நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், ராகவேந்திரா கல்லூரி முதல்வர் விஜயகுமார், கவுன்சிலர் புருஷோத்தமன் , அபெக்ஸ் சங்க தலைவர் விடியல் பிரகாஷ், அபெக்ஸ் முன்னாள் தலைவர் சண்முகம், பரமத்தி வேலூர் தன்னார்வலர் ஹேமமாலினி, அரசு பள்ளி ஆசிரியை ஹெலின் பிரிசில்லா உள்பட பலர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்தி பேசினர். சங்க மாவட்ட செயலர்கள் சுப்பிரமணி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு