குமாரபாளையத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நிர்வாகி பாலசுப்ரமணியம் தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய அரசே தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை கட்டுபடுத்த வேண்டும், பொதுத்துறையை தனியார்க்கு விற்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நிர்வாகிகள் பாலுசாமி, அருள்ஆறுமுகம்,மாணிக்கம், நஞ்சப்பன், செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story