சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள்  தின கொண்டாட்டம்!
X

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு பேரணியை எஸ்.ஐ., தங்கவடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். கொண்டாடப்பட்டது

குமாரபாளையத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் குமாரபாளையத்தில் கொண்டாடப்பட்டது. மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். சாலை விபத்துக்குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. . குமாரபாளைம் ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், எஸ்.ஐ. தங்கவடிவேல் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலை அருகிலிருந்து துவங்கிய பேரணி, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று, ரோட்டரி மண்டபத்தில் நிறைவு பெற்றது. ரோட்டரி மண்டபத்தில் ஐந்து நபர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. சமுதாயத்தின் பார்வையில் மாற்றுத்திறனாளர்கள் வாழ்வாதாரம் மகிழ்ச்சிக்குரியதா? மகிழ்ச்சியற்றதா? பட்டிமன்றம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் ஈமசடங்கு உதவித்தொகை ரூ. 25 000 ரூபாய், மாற்றுத்திறனாளி இறப்பு அன்றே வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில துணை தலைவர் துரைராஜ், மாவட்ட செயாளர் சுப்ரமணி, ரோட்டரி சங்க செயலர் சுந்தர், ஆடிட்டர் செந்தில்குமார், வி.ஏ.ஒ. செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய செயலர் நாச்சிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!