குமாரபாளையத்தில் ஈரோடு கிழக்கு வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் பட்டாசு வெடிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியை தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை விட சுமார் 6 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வந்தார். 14வது சுற்று முடிவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இளங்கோவன் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் அவரது வெற்றியை கொண்டாடும் விதத்தில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த பள்ளிபாளையம் பிரிவு சாலையில்குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதே போல் தி.மு.க. நகர செயலாளர் செல்வம், காங்கிரஸ் நகர துணை தலைவர் சிவகுமார் தலைமையில் அனைத்து வார்டுகளில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில் நிர்வாகிகள் செந்தில்குமார், செல்வராஜ், ஐயப்பன், கவுன்சிலர் ஜேம்ஸ், வேல்முருகன், சிவராஜ், சுப்ரமணி, கோகுல்நாத், சக்திவேல், தங்கராஜ், மனோகரன், தாமோதரன், ஆறுமுகம், குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்றிருப்பது வரலாற்றில் பதிவாகக் கூடிய வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.20 மாதகால திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu