குமாரபாளையம் அரசு பள்ளியில் ரூ.40,000 மதிப்பில் சி.சி.டி.வி. கேமராக்கள்

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் 4 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன.
CCTV Camera Fixing -குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாகவும், மாணவிகளை சில மாணவர்கள் கேலி, கிண்டல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனை தவிர்க்க அப்பகுதி கவுன்சிலர் ராஜ் ஏற்பாட்டின் பேரில் சிவன்கோபால் டெக்ஸ் ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் விஸ்வநாதன் சி.சி.டி.வி. வாங்கி அமைத்து கொடுக்க முன்வந்தார். இதன்படி நேற்று பள்ளியில் 40 ஆயிரம் மதிப்பிலான 4 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu