பள்ளிபாளையம் பாலத்தில் வெளிமாவட்ட வாகனங்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தம்
பள்ளிப்பாளையம் புது பாலத்தில் சிசிடிவி கேமராவை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
நாமக்கல் மாவட்டத்தின் எல்லை பகுதியாக பள்ளிபாளையம் காவிரி ஆற்றங்கரையோரம், பழைய பாலம், மற்றும் புதுப்பாலம் உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, ஈரோடு மாவட்ட காவல் துறையினரும், நாமக்கல் மாவட்ட காவல் துறையினரும், இரு மாவட்ட எல்லைகளிலும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்ட எல்லைக்குள் வரும் வெளிமாநில மாவட்ட வாகனங்களை கண்காணிக்கும் பொருட்டு, பள்ளிபாளையம் புதுபாலத்தில் இரண்டு சிசிடிவி கேமராக்களும், பழைய பாலத்தில் ஒரு சிசிடிவி கேமராக்கள் என மொத்தமாக மூன்று சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
பாலத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் கண்காணித்து, பாதுகாப்பு, குற்றச்செயல்கள் மற்றும் விபத்து உள்ளிட்ட நிகழ்வின்போது உடனடி தீர்வு காணும் வகையில் இந்த சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருவதாக, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளிலும்,முக்கிய பகுதிகளிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu