காவிரி ஆற்றில் வெள்ளம்: தயார் நிலையில் குமாரபாளையம் தீயணைப்பு படையினர்

காவிரி ஆற்றில் வெள்ளம்: தயார் நிலையில்  குமாரபாளையம் தீயணைப்பு படையினர்
X

குமாரபாளையம் தீயணைப்பு படையினர் சார்பில் பேரிடர் மீட்பு சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

காரிவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கையாக குமாரபாளையம் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

காவிரி ஆற்றில் வெள்ளம் வரவிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர், சேலம் டி.ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்பதற்கு தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மீட்பு பணிக்கு தேவையான கயிறு, டியூப்கள், பிளாஸ்டிக் படகுகள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவைகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!