தேசிய மாணவர் படை தினத்தையொட்டி காவிரி ஆற்றில் தூய்மைப்பணி

தேசிய மாணவர் படை தினத்தையொட்டி  காவிரி ஆற்றில் தூய்மைப்பணி
X
தேசிய மாணவர் படை தினத்தையொட்டி குமாரபாளையம் காவிரி ஆற்றில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

தேசிய மாணவர் படை தினத்தையொட்டி காவிரி ஆற்றில் தூய்மைப்பணி

தேசிய மாணவர் படை தினத்தையொட்டி குமாரபாளையம் காவிரி ஆற்றில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

தேசிய மாணவர் படை தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் நான்காவது வாரம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும். இந்த முக்கிய தினத்தையொட்டி, ஈரோடு 15 ஆவது தமிழ்நாடு பட்டாலியன் சார்பாக, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள காவிரி கரையோர பகுதிகளை தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் சுத்தம் செய்தார்கள். கழிவு பொருட்களை மக்கும் குப்பை , மக்காத குப்பை என்று தரம் பிரித்தார்கள். சிறப்பு விருந்தினராக ஈரோடு 15 வது தமிழ்நாடு பாட்டாலியனின் கமாண்டிங் ஆபிஸர் கர்னல் அஜய் குட்டினோ, சுபேதார் சுரேஷ் சந்திரா உள்பட பலர் பங்கேற்றனர். இதில் குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர், ராமமூர்த்தி, எஸ்.ஐ. சந்தானகிருஷ்ணன், விடியல் பிரகாஷ், தீனா, பாண்டியன், ரதிபிரியா, மேனகா, முருகேஸ்வரி ,பிரபு, ஜே கே கே நடராஜா கலை மற்றும் அறிவியல், எஸ். எஸ். எம். பாலிடெக்னிக் கல்லூரிகள், எஸ். எஸ். எம். லட்சுமி அம்மாள் மெட்ரிக், ஜே.கே.கே.ரங்கம்மாள், எக்ஸல், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர்கள் பொதுமக்கள் பங்கேற்றார்கள்.

இந்நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி ஏற்பாடு செய்தார்.

தேசிய மாணவர் படை தினத்தையொட்டி குமாரபாளையம் காவிரி ஆற்றில் என்.சி.சி. மானவர்கள் சார்பில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்