வெள்ளப்பெருக்கால் குமாரபாளையம் காவிரி ஆறு பழைய பாலம் அடைப்பு

வெள்ளப்பெருக்கால் குமாரபாளையம் காவிரி ஆறு   பழைய பாலம் அடைப்பு
X

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குமாரபாளையம் பழைய காவிரி பாலம் மூடப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கின் காரணமாக குமாரபாளையம் பழைய காவேரி பாலம் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் காவேரி ஆற்றில் அதிக அளவிலான வெள்ளம் சென்று கொண்டுள்ளது. பழைய காவேரி பாலத்தின் உறுதி தன்மை மிகவும் பலகீனமாக இருப்பதால் பல ஆண்டுகளாக கனரக வாகனங்கள் அனுமதிப்பதில்லை. தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் வேடிக்கை பார்பதற்காக வழி நெடுகிலும் நின்று வேடிக்கை பார்த்தும், ஒரு சில நபர்கள் காவேரி ஆற்றில் குதித்து சாகசமும் செய்து வருகிறார்கள். இதனை தடுக்கவும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவும் இந்த பாலம் அடைக்கப்பட்டது. பவானி செல்பவர்கள் காவேரி நகர் பாலம் வழியாகவும், புறவழிச்சாலை பாலம் வழியாகவும் சுமார் 3 கி.மீ. சுற்றி சென்று வருகிறார்கள்.

Tags

Next Story
ai in future agriculture