மக்கள் நீதி மய்யம் கோரிக்கை ஏற்று பாலம் பராமரிப்பு பணி துவக்கம்

மக்கள் நீதி மய்யம் கோரிக்கை ஏற்று பாலம் பராமரிப்பு பணி துவக்கம்
X
குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை ஏற்று பாலம் பராமரிப்பு பணி துவக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கோரிக்கை ஏற்று பாலம் பராமரிப்பு பணி துவக்கம்

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை ஏற்று பாலம் பராமரிப்பு பணி துவக்கப்பட்டது.

குமாரபாளையம் மற்றும் பவானி செல்லும் காவிரி ஆற்றின் பழைய பாலம், மிகவும் பழுதாகி உள்ளது. இதன் பக்கவாட்டு சுவர், கைப்பிடி சுவர் ஆகியவை விரிசல் விழுந்து, பெயர்ந்து விழுந்த நிலையில் உள்ளது. இதில் பல ஆண்டுகளாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது ஆட்டோ, கார் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. பாலம் இருக்கும் நிலையில் தற்போது, இது கூட செல்வது ஆபத்தாக உள்ளது. எந்நேரமும் அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் உள்ளதால், பாலத்தை பராமரிப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது, பாலம் பராமரிப்பு பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை ஏற்று பாலம் பராமரிப்பு பணி துவக்கப்பட்டது.

Next Story