வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய பத்திரிக்கையாளர்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உணவு வழங்கிய பத்திரிக்கையாளர்கள்
X

குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்பு பொதுமக்களுக்கு பத்திரிக்கையாளர்கள் சார்பில் நேற்று இரவு பிரியாணி வழங்கும் நிகழ்வை இன்ஸ்பெக்டர் ரவி, பா.ஜ.க. நிர்வாகி சரவணராஜன் துவக்கி வைத்தனர்.

குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்பு பொதுமக்களுக்கு பத்திரிக்கையாளர்கள் சார்பில் நேற்று இரவு பிரியாணி வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்பு பொதுமக்களுக்கு பத்திரிக்கையாளர்கள் சார்பில் நேற்று இரவு பிரியாணி வழங்கப்பட்டது.

மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் முழுவதுமாக திறந்து விடபட்டு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான கலைமகள் தெரு இந்திரா நகர், பழைய காவிரி பாலம் அருகே உள்ள அண்ணா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர், ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காவிரி நீர் புகுந்தது. இங்கு குடியிருந்த நபர்கள் புத்தர் தெரு நகராட்சி துவக்கப்பள்ளி, மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேற்று இரவு பத்திரிக்கையாளர்கள் சார்பில் பிரியாணி வழங்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ரவி, பா.ஜ.க. அரசியல் தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சரவணராஜன் பங்கேற்று உணவு வழங்கி துவக்கி வைத்தனர். ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன்,செந்தில்குமார், வி.ஏ.ஒ. அலுவலக உதவியாளர்கள் காமராஜ், ரகு, பத்திரிக்கையாளர்கள் பாண்டியன், செந்தில், நந்தகுமார், யவன சோழன், மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!