குமாரபாளையம் காவிரி கரையோர முட்புதர்களை அகற்றலாமே

குமாரபாளையம் காவிரி கரையோர முட்புதர்களை  அகற்றலாமே
X

குமாரபாளையம் காவிரி பழைய பாலம் அருகே காவிரி கரையோரம் காணப்படும் முட்புதர்.

குமாரபாளையம் காவிரி பழைய பாலம் அருகே கரையோரம் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி பழைய பாலம் அருகே, காவிரி கரையோரமாக முட்புதர்கள் அதிகம் உள்ளது. தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருக்கும் சூழலில், அதில் வரும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், முட்புதர்களில் சிக்கி, அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.

இதனால் காவிரி கரையோரப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில், கரையோரம் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!