குமாரபாளையம் அருகே 5 வயது சிறுவன் சாவுக்கு காரணமான கார் ஓட்டுனர் கைது

குமாரபாளையம் அருகே 5 வயது சிறுவன் சாவுக்கு காரணமான  கார் ஓட்டுனர் கைது
X

கைது செய்யப்பட்ட சபரிகிரிஷ்

குமாரபாளையத்தில் 5 வயது சிறுவன் சாவுக்கு காரணமான கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையத்தில் 5 வயது சிறுவன் சாவுக்கு காரணமான கார் ஓட்டுனர் கைது செய்யபட்டார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தவன் பிரகாஷ்கண்ணன்(வயது 5.) இவனை தாத்தா கோவிந்தன், அம்மா திவ்யா ஆகிய இருவரும் ஜூலை 11,மாலை 03:50 மணியளவில் டூவீலரில், டூவீலரின் பெட்ரோல் டேங்க் மீது பிரகாஷ்கண்ணனை உட்கார வைத்துகொண்டு சேலம், கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வேகமாக வந்த கார் இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. பலத்த காயமடைந்த மூவரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர். வரும் வழியில் மாணவன் பிரகாஷ் கண்ணன் உயிரிழந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவிந்தன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். திவ்யா குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். பிரகாஷ் கண்ணனின் தந்தை நவீன் பந்தல் வேலை செய்து வருபவர் என்பதும், இவர்கள் அனைவரும் கத்தேரி பிரிவு அருகே உள்ள விஜயநகர் காலனியில் வசித்து வருவதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் சிறுவன் சாவுக்கு காரணமான நபரை பிடிக்க சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் ஆகியோர் கண்டுபிடித்தனர். விசாரனையில் சேலம், ஓந்தாபிள்ளை பகுதியில் வசிக்கும் சபரிகிரீஸ், (38, )என்பவர்தான் இந்த விபத்துக்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவரை போலீசார் கைது செய்தனர்.

இவர் முடிதிருத்தும் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் நடந்து வரும் விவாகரத்து வழக்கு சம்பந்தமாக திருப்பூர் சென்று விட்டு திரும்பி வரும்போது தான் இந்த விபத்து நடந்தது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!