குமாரபாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள விபத்தை ஏற்படுத்தும் அபாய பள்ளம்

குமாரபாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள விபத்தை ஏற்படுத்தும்   அபாய பள்ளம்
X

குமாரபாளையம் பஸ் நிலையத்திலிருந்து வெளியில் வாகனங்கள் வரும் சாலை நுழைவுப்பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் பெரிய பள்ளம்.

குமாரபாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள விபத்தை ஏற்படுத்தும் அபாய பள்ளத்தை மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையத்தில் விபத்தை ஏற்படுத்தும் அபாய பள்ளத்தை மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வாகனங்கள் வரும் சாலை நுழைவுப்பகுதியில் வடிகாலையொட்டி பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் இருப்பது தெரியாமல் பலரும் விழுந்து காயமடைத்து வருகிறார்கள். பஸ்கள், கார்கள், ஷேர் ஆட்டோக்கள், மார்க்கெட்டிற்கு வரும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த வழியாகத்தான் வருகின்றன. நாளுக்கு நாள் இந்த பள்ளம் பெரிதாகி வருவதால் வாகனங்கள் இதில் சிக்கி கவிழும் நிலை ஏற்படும் என்பதால், அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, இந்த பள்ளத்தை மூடி சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!