நாமக்கல் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் ஜாதி சான்று மெய்த்தன்மை ஆய்வு முகாம்

நாமக்கல் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் ஜாதி சான்று மெய்த்தன்மை ஆய்வு முகாம்
X

நாமக்கல் ஆதி திராவிடர் நல அலுவலகத்தில் நடைபெற்ற ஜாதி சான்று மெய்த்தன்மை ஆய்வு முகாம்.

நாமக்கல் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் ஜாதி சான்று மெய்த்தன்மை ஆய்வு முகாம் நேற்று நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜாதி சான்று மெய்த்தன்மை ஆய்வு முகாம் நாமக்கல் ஆதி திராவிடர் நல அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் சில மாதங்கள் இந்த ஆய்வு தள்ளி போனது.

நேற்று இந்த ஆய்வு முகாம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி, நாமக்கல் ஆதி திராவிடர் நல அலுவலகத்தில் துறை நல அலுவலர் மரகதவள்ளி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து 62 பேர் பங்கேற்றனர். மாநில, மாவட்ட சாதி சான்று சரிபார்க்கும் குழு உறுப்பினரும், மானுடவியல் வல்லுனருமான பாண்டியராஜ் பங்கேற்று, அனைவரது சான்றிதழ்களை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து பாண்டியராஜ் கூறுகையில், பட்டியலின சாதி சான்று பெற்று கல்வி, வேலைகள் பெற்று பயன் பெறுபவர்கள் முறையாக சாதி சான்று பெற்றவர்தானா? இவருக்கு வழங்கப்பட்ட சலுகை சரியானதுதானா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இது போன்ற விசாரணை வழக்கத்தில் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த சாதி சான்று சரிபார்க்கும் முகாமில் பழ ஊர்களில் இருந்து வந்துள்ளனர். இவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture