கண்டெய்னர் லாரிக்குள் சிக்கிய கார்: புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கண்டெய்னர் லாரிக்குள் சிக்கிய கார்: புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
X

டீச்சர்ஸ் காலனி பகுதியில் கண்டெய்னர் லாரிக்குள் சிக்கிய கார்.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் கண்டெய்னர் லாரிக்குள் சிக்கிய காரால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை உள்ளது. கவுரி தியேட்டர் பின்புறம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் பவானி செல்லும் வாகனங்கள் யூ டர்ன் போட்டு திரும்பி செல்லும்.

மாலை 6 மணியளவில் கண்டெய்னர் லாரி ஒன்று இந்த பகுதியில் வளைந்து பவானி செல்ல திரும்பியது. அப்போது சேலம் பக்கமிருந்து வந்த கார் ஒன்று இந்த லாரியின் கீழ் பகுதியில் சிக்கியது. இதனால் சிறிது நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் 45 நிமிடத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்து நேரில் சென்றனர். மீட்பு வாகனம் மூலம் காரை வெளியில் எடுத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!