ஓட்டுநரின் கண்ணாடி விழுந்ததால் கார் கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய 5 பேர்

ஓட்டுநரின் கண்ணாடி விழுந்ததால் கார் கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய 5 பேர்
X

விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீர் குட்டையில் கவிழ்ந்து கிடக்கும் கார்.

குமாரபாளையத்தில் ஓட்டுனரின் கண்ணாடி கீழே விழுந்ததால் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கர்நாடக மாநிலம், பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அபேட், 22, ஜார்ஜ், 24, பிரியா, 21, மனாக், 23, அனுவிந்த், 22 , 5 பேரும், கொடைக்கானல் சுற்றுலா செல்ல ஐ.கான் காரில் வந்தனர். காரின் உரிமையாளர் ஜார்ஜ் காரை ஓட்டி வந்தார்.

குமாரபாளையம் வட்டமலை தட்டான்குட்டை பிரிவு பகுதியில் வரும் போது, ஜார்ஜ்-ன் கண் கண்ணாடி தவறி கீழே விழுந்துள்ளது. இதனால் சரியாக பார்வை தெரியாததால் டிவைடர் மீது மோதியதில் கார் தூக்கி வீசப்பட்டது. இதில் அருகே இருக்கும் சர்வீஸ் சாலையை தாண்டி விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீர் குட்டையில் கார் கவிழ்ந்தது.

இதில் பயணம் செய்த நபர்கள் ஐந்து பேரும் கதவு திறக்க முடியாததால் கார் கண்ணாடியை உடைத்து வெளியே நீந்தி வந்தனர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து இவர்களை மீட்டனர். இதனை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியதால் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, சாலையில் நின்றிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தி, நீண்ட வரிசையில் காத்திருந்த அனைத்து வாகனங்களும் செல்ல வழி ஏற்படுத்தினர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
50 வயசுக்கு மேல இருக்கவங்களா நீங்க..?உடனே இந்த தடுப்பூசிய போடுங்க..லேட் பண்ணிடாதீங்க !