குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்
X
குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

திருச்செங்கோடு, தொக்கவாடி பகுதியில் வசிப்பவர் பரந்தாமன், 57, தொலைபேசி நிலைய ஊழியர். இவர் நேற்று காலை 11:15 மணியளவில் எக்ஸல் கல்லூரி பிரிவு சாலை பகுதியில் சேலம், கோவை புறவழிச்சாலையில் சாலையை ஸ்கூட்டி வாகனத்தில் கடக்க முயன்றார். அப்போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த ஷார்ப் கார் வேகமாக மோதியதில் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் எஸ்.எஸ்.ஐ. தன்ராஜ், கார் ஓட்டுனரான குமாரபாளையம், சானார்பாளையம், தனியார் கல்லூரி பொறியியல் மாணவரான அஸ்வின், 20, என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!