தி.மு.க.வில் சீட் கிடைக்காத சேவற்கொடியோர் பேரவை வேட்புமனு தாக்கல்

தி.மு.க.வில் சீட் கிடைக்காத சேவற்கொடியோர் பேரவை வேட்புமனு தாக்கல்
X

குமாரபாளையத்தில் தி.மு.க. வில் சீட் கிடைக்காததால் சேவற்கொடியோர் பேரவை சார்பில் மஞ்சுளா வேட்புமனு தாக்கல் செய்தார்.

குமாரபாளையத்தில் தி.மு.க.வில் சீட் கிடைக்காததால் சேவற்கொடியோர் பேரவை சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் சேவற்கொடியோர் பேரவை எனும் பெயரில் பொதுநல அமைப்பு செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தினமும் இரண்டு வேளை உணவு வழங்கி வந்தனர்.

இதன் அமைப்பாளர் பாண்டியன் தி.மு.க.வின் அபிமானியாகவும் இருந்து வந்தார். அவர் சீட் கேட்ட நிலையில், தலைமை கழகம் அறிவித்த பட்டியலில் இவர் பெயர் இல்லாததால், பாண்டியனின் மனைவி மஞ்சுளா நேற்று 2வது வார்டுக்கு சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு