குமாரபாளையம் விவேகானந்தா கல்லூரியில் வாக்குகள் எண்ணுவதற்கு வேட்பாளர்கள் எதிர்ப்பு
குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி கமிஷனர் சசிகலா தலைமையில் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி கமிஷனர் சசிகலா தலைமையில் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நகராட்சி கமிஷனர் சசிகலா பேசுகையில், பிப். 11 வரை ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் செய்யவும், ஊர்வலம் செல்லவும் செல்லக்கூடாது. நட்சத்திர பேச்சாளர் பிரச்சாரத்திற்கு வந்தால், முன்னதாக மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்றிருக்க வேண்டும். வரவு, செலவு கணக்கு 35 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். இரவு 10:00 மணிக்குள் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும். வேட்பாளருடன் 20 பேர் மட்டுமே பிரசாரத்தில் பங்கேற்க வேண்டும் என பேசினார்.
இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் பெரும்பாலோர், ஒவ்வொரு நகராட்சி தேர்தலின் போதும், ஓட்டு எண்ணிக்கை குமாரபாளையம் நகர எல்லைக்குள்தான் நடைபெற்று வந்தது. தற்போது திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சுயேச்சை வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். வெற்றி பெறும் வேட்பாளர்கள் கடத்தப்பட வாய்ப்பாக அமையும். பெண் வேட்பாளர்கள் அதிகம் பேர் போட்டியிடுவதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
ஆகவே, இவைகளை தவிர்க்க குமாரபாளையம் நகர எல்லையில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் ஓட்டு எண்ணிக்கை வைப்பதுதான் அனைவருக்கும் பாதுகாப்பாக அமையும் என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த நகராட்சி கமிஷனர் சசிகலா, இது பற்றி மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்த கூட்டத்தில் அனைத்து வேட்பாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
உதவி பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, நகராட்சி மேலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu