குமாரபாளையத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு கை கொடுத்த மேகமூட்டம்

குமாரபாளையத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு கை கொடுத்த மேகமூட்டம்
X

குமாரபாளையத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு மேகமூட்டம் கை கொடுத்தது.

குமாரபாளையத்தில் இன்று மேகமூட்டம் காணப்பட்டதால் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் நகராட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்கள் வார்டுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள், உடன் வந்த தொண்டர்கள் சோர்வடைந்தனர். மேலும் பலர் பாதி வழியிலேயே திரும்பும் நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை முதலாக குமாரபாளையம் பகுதியில் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் உற்சாகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஆண்கள், பெண்கள் அதிக அளவில் திரண்டு பிரச்சாரம் செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!