குமாரபாளையத்தில் நூதன முறையில் வேட்பாளர்கள் ஓட்டு வேட்டை

குமாரபாளையத்தில் நூதன முறையில் வேட்பாளர்கள் ஓட்டு வேட்டை
X

குமாரபாளையம் 30வது வார்டில் போட்டியிடும் பாலசுப்பிரமணி, ஒரு கடையில் இறைச்சி வெட்டிக் கொடுத்து பிரச்சாரம் செய்தார்.

குமாரபாளையத்தில் வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

குமாரபாளையம் நகராட்சி தேர்தலில் 33 வார்டுகளில் 188 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் பகுதி பொதுமக்களை கவனிக்கச் செய்யும் விதமாக நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

விசைத்தறி கூடம் சென்று தறி ஓட்டுவது, பாவு போடுவது, தார் ஓட்டுவது, வைண்டிங் மெசின் ஓட்டுவது, அயர்ன் செய்யும் கடைக்கு சென்று அங்கு சட்டை மற்றும் இதர துணிகளை அயர்ன் செய்து தருதல், ஓட்டல் கடைக்கு சென்று தோசை சுட்டு தருதல், காய்கறி கடைக்கு சென்று காய்கறிகளை எடை போட்டு விற்பது, அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வேடமிட்டவருடன் சென்று ஓட்டு கேட்பது, தி.மு.க. வினர் கலைஞர் வேடமிட்ட நபருடன் ஒட்டு சேகரிப்பது போன்ற நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

30வது வார்டில் போட்டியிடும் பாலசுப்பிரமணி, ஒரு கடையில் இறைச்சி வெட்டிக் கொடுத்து பிரச்சாரம் செய்தார். நாம் தமிழர் கட்சியினர் நம்மாழ்வார் கரும்பு வைத்திருப்பது போல வேடமிட்ட சிறுவருடன் சென்று ஒட்டு கேட்டு வருகிறார்கள்.

Tags

Next Story
தேர்வில் அதிக மதிப்பெண் பெற குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தக்கூடாது: பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுரை!