காலையில் வேட்புமனு, மாலையில் தேர்வு எழுதிய மக்கள் நீதி மய்ய வேட்பாளர்

காலையில் வேட்புமனு, மாலையில் தேர்வு எழுதிய மக்கள் நீதி மய்ய வேட்பாளர்
X

ராஜசேகர், குமாரபாளையம்.

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காலையில் வேட்புமனு தாக்கல் செய்த பின் மாலையில் செமஸ்டர் தேர்வு எழுதினார்.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சி தேர்தலில் இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று மீண்டும் செல்வராஜ், வரதராஜ், ராஜசேகர், பரமேஸ்வரி ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் ராஜசேகர் காலையில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, மாலையில் தனது கல்லூரி செமஸ்டர் இறுதி தேர்வு எழுதினார்.

இதுகுறித்து வேட்பாளர் ராஜசேகர் கூறுைகயில், எனது பெற்றோர் ராமலிங்கம், ராஜேஸ்வரி. அப்பா இறந்து விட்டார். அம்மா மற்றும் என் அண்ணன் செந்தில்குமார் ஆகியோர்தான் கூலி வேலை செய்து எண்ணை படிக்க வைத்து வருகிறார்கள்.

நான் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் பி.டெக், டெக்ஸ்டைல் டெக்னாலாஜி இறுதியாண்டு படித்து வருகிறேன். இன்று இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் எழுதினேன். காலையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக நகராட்சி அலுவலகத்தில் 25வது வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!