ஊரடங்கு காலத்தில் இப்படியும் செய்யலாமா!? ஆச்சரியப்படுத்தும் இளைஞர்

ஊரடங்கு காலத்தில் இப்படியும் செய்யலாமா!? ஆச்சரியப்படுத்தும் இளைஞர்
X
இளைஞர் லோகேஷ் தனது எக்ஸெல் வாகனத்தில், வீடுவீடாக பூ விற்பதை படத்தில் காணலாம்.
காலை மற்றும் மாலை வேளைகளில் பூ வியாபாரத்தினால் கணிசமான லாபம் கிடைப்பதனால் ஊரடங்கு தளர்வு பிறகும் இதே வேலையை தொடர முடிவு செய்திருப்பதாக இளைஞர் தெரிவித்தார்!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழுக் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்பொழுது தொற்று பரவல் எண்ணிக்கையை பொறுத்து குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் வசிக்கும், லோகேஷ் என்ற இளைஞர் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருக்க விரும்பாமல், ஊரடங்கு காலத்தில் ஏதேனும் சிறிய அளவிலான வருமானம் பெறுவதற்கான வழிமுறைகளை கண்டறிந்தால் என்ன என்ற மாற்று சிந்தனையுடன் யோசித்த, இளைஞர் வீடுவீடாக பூ விற்கலாமென! என முடிவுசெய்து அதற்காக சிறிய முதலீட்டில் பூக்களை மொத்தமாக வாங்கி தனது இருசக்கர வாகனத்தில் வீடு வீடாக விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து இளைஞரிடம் நாம் கேட்டபொழுது, ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு வீட்டுக்குள் இருக்க சொன்னாலும் வாழ்வாதார தேவைக்காகவும்,வீட்டில் சும்மா இருப்பது பிடிக்காததால், காலை மற்றும் மாலை வேளைகளில் தனது எக்செல் வாகனத்தில் பூ வியாபாரம் செய்து வருவதாகவும் இதனால் கணிசமான லாபம் கிடைப்பதினால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகும் இந்த தொழிலை தொடர்ந்து செய்ய உள்ளதாக தெரிவித்தார். ஊரடங்கு காலத்தில் வேலை வாய்ப்பில்லை,பொருளாதார பாதிப்பு உள்ளது என பலரும் புலம்பி வரும் சூழலில், மாற்று சிந்தனையுடன் படித்த ஒரு இளைஞர் சுயதொழிலில் இறங்கியுள்ளது சமூக ஆர்வலர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

Tags

Next Story
ai marketing future