கடமைக்கு நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

கடமைக்கு நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கடமைக்கு நடந்து முடிந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

குமாரபாளையம் 14வது வார்டில் உள்ள பாபு என்பவர் பெயருக்கு பதிலாக இந்திராணி என்றும், ரவி என்ற பெயருக்கு பதிலாக தர்மலிங்கம் என்ற பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதேபோல் பல வார்டுகளில் பலரது பெயர்கள், போட்டோக்கள் மாறி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் பெயர்கள் மாற்ற விண்ணப்பம் கொடுத்தும் பெயர்கள் மாறவில்லை எனவும், பெயரவில்தான் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடந்துள்ளது எனவும் பாபு, ரவி கூறினார்கள். இப்படிப்பட்ட நபர்கள் ஓட்டு போட முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!