/* */

குமாரபாளையத்தில் நடைமேடை பணிகளால் குளம் போல் காட்சியளிக்கும் சாலைகள்

குமாரபாளையத்தில் நடைமேடை பணிகளால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நடைமேடை பணிகளால்  குளம் போல் காட்சியளிக்கும் சாலைகள்
X

குமாரபாளையத்தில் நேற்று மாலை மழை பெய்தது. (இடம்: பஸ் ஸ்டாண்ட் )

குமாரபாளையத்தில் சேலம் சாலை கத்தேரி பிரிவு முதல் காவல் நிலையம் வரை வடிகால் அமைக்கப்பட்டு, நடைமேடை அமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 2 மணியளவில் கன மழை பெய்தது. இதனால் சேலம் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் சாலையில் ஒ.வி.கே. பெட்ரோல் பங்க், பஸ்கள் வெளியில் வரும் பகுதி, ஜே.கே.கே. பங்களா எதிரில், ஆனங்கூர் பிரிவு சாலை, சரவணா தியேட்டர் அருகில் உள்ளிட்ட நடைமேடை அமைத்த பகுதிகளில் மழைநீர் வடிகாலில் சேர வழியின்றி குளம் போல் தேங்கி நின்றது.

பஸ் ஸ்டாண்டு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீர்.

இதனால் சாலையில் சென்ற வாகனங்களால் தண்ணீர் தெறிக்க, அருகில் உள்ள வியாபார நிறுவனத்தார்கள், டூவீலர் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழை நின்ற பின் தேங்கிய மழைநீர் சேரும் சகதியுமாக மாறி, பெறும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

நெடுஞ்சாலைத்துறையினர் இது குறித்து கவனம் செலுத்தி, மழை நீர் சாலையில் தேங்காமல் அனைத்தும் வடிகாலில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Sep 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  6. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  7. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  9. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!